மெட்ராஸ்ல,
ஒரு பூ வியாபாரி முடி வெட்டுற கடைக்கு போனார்.
முடி வெட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் பணம் கொடுத்தா,
முடிவெட்டுறவர் வாங்க மறுத்துவிட்டு,
"மழை வெள்ளத்தால மக்கள் நிறைய சிரமத்துல இருக்காங்க, அதனால இந்த வாரம் முழுக்க நான் சமூக சேவை செய்யும் பொருட்டு இலவசமா முடிதிருத்தம் பண்ணப்போறேன்" அப்டினு சொல்லிட்டார்.
பூ வியாபாரியும் வாழ்த்து சொல்லிட்டு வந்துட்டார்.
அடுத்தநாள் காலைல முடிவெட்டுபவர் கடையை திறக்க வந்தபோது கடைவாசலில் ஒரு நன்றி வாழ்த்து அட்டையுடன் அழகான ரோஜாப்பூ மாலையும் இருந்தது.
அடுத்தநாள் ஒரு தள்ளுவண்டி வியாபாரி முடிவெட்டிட்டு பணம் தந்தபோதும் முடிவெட்டுபவர் அதேபதிலை சொன்னார். தள்ளுவண்டிக்காரரும் நன்றியும் வாழ்த்தும் சொல்லிட்டு போய்விட்டார்.
அடுத்தநாள் காலையில் முடிவெட்டுபவர் கடையை திறக்க வந்தபோது நன்றி வாழ்த்து அட்டையுடன் ஒரு சின்ன கூடையில் காய்கள் இருந்தன்.
அடுத்தநாள் ஒரு அரசியல்வாதி முடிவெட்டிக்கொண்டு பணம் தந்தபோதும், முடிதிருத்துபவர் பணம் வாங்கமறுத்துவிட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வாரம் முழுக்க இலவசசேவை செய்யப்போறேன்னு சொன்னார்.
அரசியல்வாதியும் சந்தோசமா போய்விட்டார்.
காலையில் கடையை திறக்கவந்த முடிதிருத்தம் செய்பவர் அதிர்ச்சியில் மயக்கம் ஆயிட்டார்,
ஏன்னா?.
.
.
.
.
.
.
.
.
.
.
கடையில் "அம்மா" ஸ்டிக்கர் ஒட்டி,
"அம்மா சலூன்" என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது.......
Comments