Skip to main content

விசாலினி என்னும் விருட்சம் Part 1

Young achiever from thirunelveli. ..must visit the website...
விசாலினி என்னும் விருட்சம்   Part  1

அல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.  13 வயதிற்குள்,  5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும்  பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருப்பவர்.

Google  நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில் ஒருமணி நேரம் சிறப்புரை ஆற்றிய இக்குழந்தையைப் பார்த்து, பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர்.  அங்கு  The Youngest Google Speaker  என்ற பட்டமும் பெற்றார்  விசாலினி.  

11 வயது குழந்தையாக இருக்கும் போதே, 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, Computer Networking   தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை ஆற்றி, உலகஅரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர்.   சர்வதேச கணினி மாநாடுகளில்--பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.ஆனால் விசாலினியோ, 11 வயது குழந்தையாக இருக்கும்போதே, 10 சர்வதேச கணினி மாநாடுகளிலும் 
70 முதல் 80   நாட்டு அறிஞர்கள் மத்தியில், தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர். She has been invited as the Chief Guest for 10 International Conferences and Delivered Keynote Speeches there.

11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்-
அதுவும்  24  மணிநேரத்தில்.   தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.  தன் 11வயதில்,   25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு   Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s),   முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். 

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.  அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான  IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.

தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, 
ஓர் இந்தியர். அதுவும் தமிழர். 
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

HCL  நிறுவனம்  The Pride of India - Visalini  என பாராட்டிய போது அவருக்கு வயது 11.  TEDx   சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய  விசாலினி  11 வயதில்,  The Youngest TEDx  Speaker  என்ற பட்டமும் பெற்றார்.  London, World Records University, Dean  தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார்   விசாலினி. 

Times   Now English   News   நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2  நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The  Amazing  Indian -  Visalini  என அரை மணி நேர Documentry
படத்தை ஒளிபரப்பியது.

நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி   நிறுவனமான SBS ஆஸ்திரேலியா,  உலகின்
74 மொழிகளில் 174  நாடுகளில்  விசாலினியின் அரைமணி நேர பேட்டியை  ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது  விசாலினிக்கு
வயது 13 தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை  மாலையில்  விசாலினியின்  தந்தைக்கு வந்தது ஒரு Phone Call.  Our Prime Minister   Mr. Modi  wants to meet your Daughter Visalini  என்று.  பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று
தமிழில் வணக்கம் என்று  சொல்ல,  பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்
என்றார் பிரதமர் மோடி.  பிரதமர் மோடி  விசாலினியுடன் உரையாடிய போது,  இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான  சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ,  விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் 
என்று  பெருமை பொங்க வாழ்த்தினார்.  உலக அளவில்  பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு,  தான் இன்னும்  தமிழக  முதல்வரின்  பாராட்டைப்  பெற வில்லையே  என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

உங்களுக்குத் தெரியுமா,  சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர்  ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160.  ஆனால்  விசாலினியின்   IQ level 225.  உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி,  நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்.  உலகிலேயே இல்லை  இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக  ஆனவர்.

நண்பர்களே, விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை முடிந்தவரை அனைவரும் Facebook,  Whatsapp ல் Share செய்யுங்கள். இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்.

விசாலினியின் இணையதளம் - www.kvisalini.com
Email id --- goldengirlvisalini@gmail.com  
Facebook – https://www.facebook.com/visalini.kumaraswamy
Twitter – https://twitter.com/ggvisalini
Linkedin - https://www.linkedin.com/in/ggvisalini

நண்பர்களே,
விசாலினியின் சாதனைப் பட்டியலின் நீளம் சற்று அதிகம்.
இவை சில துளிகள் தான்.
புகைப்படங்களுடன் முழுமையான தகவல்கள் அறிய 
இந்த link ஐ Download செய்யவும்

https://drive.google.com/open?id=0B_fadVMbv6ZYUjhTSUZMSEIzeFk

விசாலினி என்னும் விருட்சம்  Part  2  விரைவில் !!!!

Comments

Popular posts from this blog

TNPSC Combined Technical Services Examination 2025 - Non Interview Posts

Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10***   Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEM...

Go to Zites! Future posts will be hosted in Zit.es

  Zites Logo Arivumani created website network namely, 'Zites (Zone of Sites)'. Co1 blog posts will be published in Zites at domain Zit.es. Keep Watching...