600 ஆண்டுகளுக்கு பிறகு பர்வதமலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,
சிறப்பாக நேற்று நடைபெற்றது
“ஏழைகளின் கைலாயம்” என்றழைக்கப்படும் பர்வதமலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகில் உள்ள பருவதமலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கலசப்பாக்கம் அருகே தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை உள்ளது. இம்மலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பருவதமலை பிரம்மராம்பிகை சமேத ஸ்ரீமல்லிகார்ஜூன் சாமி கோவில் உள்ளது.
சுமார் 600 ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இதனால் 2010ம் ஆண்டு கோவிலின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.
இதில் புதிதாக அர்த்த மண்டபம் மகா மண்டபம், தியான மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது கோவிலின் திருப்பணிகள் முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Comments