இன்று நாம் காணவிருக்கும் பெருமாளின் திருத்தலம் "திருக்கூடலூர்" ஸ்தலத்தின் பெருமைகளைப் பற்றி காணவிருக்கின்றோம்.
ஒவ்வொரு தலங்களிலும் பெருமாள் ஒவ்வொரு திருவிளையாடல்களை செய்து அதில் தானும் மகிழ்ந்து, பக்தர்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
பகவான் எப்போது வருவார், எந்த உருவத்தில் வருவார் என்று நம்மை ஏங்க வைக்கிறது. இப்பொழுது நாம் திருவையாறு - கும்பகோணம் பாதையிலே 11 கி.மீ தொலைவிலே "ஆடுதுறை பெருமாள் கோயிலில்" குடிகொண்டிருக்கும் "வையங்காத்த பெருமாளை" சேவிக்கலாம்.
மூலவரின் திருநாமம் "வையங்காத்த பெருமாள்", உய்ய வந்தார் என்பதாகும். தாயார் பத்மாஸ்ரீ, புஷ்பவல்லி. கோயில் தீர்த்தம் - காவிரி நதி, சர்க்கரை தீர்த்தம், விமானம் - சுத்தசத்வ விமானம். முனிவர்களில் பிரசித்தி பெற்ற "நந்தக முனிவருக்கு" பகவான் தரிசனம் தந்த தலம் இது என்பதால் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
தேவர்களிடமிருந்தும், பக்தர்களிடமிருந்தும் சில காலம் ஓய்வெடுக்க விரும்பிய பகவான் இத்திருத்தலத்திற்கு வந்தார். இதை தக்க தருணமாகக் கருதிய நந்தக முனிவர் பெருமாளின் தரிசனம் கிடைக்க காத்திருந்தார். ஆனால் பெருமாளின் தரிசனம் கிடைக்கவில்லை. அதனால் நந்தக முனிவர் தேவர் முதலானோரிடம் பெருமாள் இத்தலத்தில் ஓய்வில் இருப்பதாகக் கூறிவிட்டார்.
தேவர்களுடன் நந்தக முனிவரும் சேர்ந்து வருவதைக் கண்ட பெருமாள், இனியும் தாமதம் வேண்டாமென்று முதலில் நந்தக முனிவருக்கும், பின்பு இந்திரன் முதலான தேவர்களுக்கும் காட்சி கொடுத்தார். அனைவரும் ஒட்டு மொத்தமாகக் கூடி பெருமாளின் தரிசனம் பெற்றதால் இத்தலம் "திருக்கூடலூர்" எனும் பெயர் பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இக்கோயிலை "இராணி மங்கம்மாள்" பெருமாளின் சொல்லுக்கிணங்க சீரமைத்தார். இதைத்தான் இப்பொழுத�
இதைத்தான் இப்பொழுது நாம் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.
திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பற்றி 10 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
ஒருமுறை வேகமாக வந்த காவிரி நதியை, பகவான் சாந்தப்படுத்தியதாக வரலாறு உள்ளது.
இத்தலத்திற்கு வந்து வணங்குவதால், பகவானை காண வேண்டுமென பக்தியால் துடிப்பவர்கள், பேச இயலாத குழந்தைகள், அங்கஹீனம் உள்ளவர்கள், தெரியாமற் செய்த தவறுக்கு தண்டனை பெறுபவர்கள், நினைத்த காரியம் நடக்க விரும்புபவர்கள், தங்கள் குறைகள் நீங்கி நிவர்த்தி பெறுவார்கள்.
Comments