எண்ணங்களும் வண்ணங்களும்...
சிந்தட்டும் புன்னகையாய்.
ஏற்றி வைத்த தீபச்சுடர்...
ஒளிரட்டும் சின்னங்களாய்.
பூட்டி வைத்த அடிமை நிலை
ஒழியட்டும் இந்த அகிலத்தில்.
இனிய புத்தாண்டே வாழ்க.
உன்னால் வையகமும் வாழ்க
எதிர் வரும் எதிரியின்
எண்ணங்களை அழித்திட...
முளைத்து வரும் துரோகியின்
முடிவுகளை முடக்கிட....
மாறுவேடம் பூண்டு...
வெளிவரும் புத்தாண்டே
வருக வருக வருக.
வாடிய பயிருக்கு நீராய்....
வறுமை நிலைதனை போக்க...
மானிடத்தின் மத்தியில்
மாற்றம் ஒன்றைக் காண
வீரநடை போட்டு வீறுகொண்டு வா...
விடுதலை தரும் ஆண்டே.
வேலன் கரிகாலன் செந்தமிழன்...
எம் குலச்சாமியடா... இவர்
இலட்சியங்கள் நனவாக...
நாம் தமிழர் களம் காண...
புலியாய்ப் பாய்ந்து வா
புதுமைப் புத்தாண்டே...!
தமிழின... உணர்வோடு....
தன்மானத் தமிழ்க் கலையோடு
தலை நிமிர்ந்த தமிழ் பண்போடு
இறுதிவரை ஒரே பாதையில்...
இனி வரும் ஆண்டில்...
இணைவோம்... வெற்றி...
வாகை சூடுவோம்.
Comments