யார் சந்நியாசி ?
யாரையும் உங்களுக்கு அடிமையாக்காதீர்கள். நீங்கள் யாருக்கும் அடிமையாகாதீர்கள்.
இதுதான் உண்மையான சந்நியாசம்.
தனக்குத் தானே உண்மையாக இருப்பதாக எவன் உறுதி பூண்டிருக்கிறானோ அவனே உண்மையான சந்நியாசி.
ஒரு சந்நியாசி சிப்பாய் இல்லை.
அதே சமயம் அவன் ஒரு குற்றவாளியும் இல்லை.
விதிமுறைகள் எல்லாம் இந்தச் சமூக விளையாட்டின் ஒரு பகுதி என்று அவனுக்குத் தெரியும்.அவன் விதிமுறைகளை எதிர்ப்பதில்லை.
அதைக் கடந்து அதற்கு அப்பால் செல்கிறான்.
அவை தன்னைக் கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறான்.
மற்றவர்களுக்காக அந்த விதிகளைக் கடைபிடிக்கிறான்.
அந்த விதிகள் அவனை ஒரு இயந்திரமாக்காமல் கவனமாக பார்த்துக் கொள்கிறான்.
அவன் எப்போதும் முழு விழிப்புணர்வுடன் செயல்படுகிறான்.
விழிப்புணர்வே நம் இலக்கு.
ஓஷோ
Comments