கேள்வி :
மானிடப் பிறவியின் நோக்கம். ?
தேனி சுவாமிகள் :
பிறவா நிலையாகிய ஆத்ம ஞான நிலையைப் பெற வேண்டும்..
மனிதன் பல பிறவிகளைப் பிறந்து முடிவில், மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கம்..ஆன்ம விடுதலை அதாவது மோட்சமடைய வேண்டும்..
இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறவி நோக்கம்...
அல்லது லட்சியமாக இருக்க வேண்டும்
கேள்வி :
மனித வாழ்வில் துன்பம் இன்றி வாழ வழி என்ன..?
தேனி சுவாமிகள் :
மனிதன் துன்பம் இன்றி வாழ ஒரே வழி..தனது உண்மை சொரூபம் என்ன என்பதை தியானத்தின் மூலம் உணா்வதுதான்..
மனிதன் தன் உண்மை எது என்று உணராமையால், தேகத்தை நான் என்று எண்ணி, பல ஆசைகளில் சிக்கி துன்பம் அடைகிறான்..
தன் உண்மை சொரூபத்தை உணா்ந்தால், அனைத்து ஆசைகளும் அகன்று, அனைத்து துன்பங்களும் நிவா்த்தி ஆகும்..
மாறாத சாந்தியும், சுகமும் தானே உண்டாகும்..
கேள்வி :
அனுபவ ஞானிகளைப் புாிந்து கொள்ள வழி என்ன..?
தேனி சுவாமிகள் :
அனுபவ ஞானிகளை அனுபவ ஞானம் பெற்ற மற்ற ஞானிகளே புாிந்து கொள்ள முடியும்..
மனமற்ற.. அலைவற்ற.. ஆன்ம நிலையும்..,
விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம் இவற்றிற்கு ஆட்படாத நிலையும்...
எப்பொழுதும் ஆத்ம சுகத்தையே அனுபவித்திருப்பவா்கள் ஆத்ம ஞானிகள்..
அவா்கள் அனுபவத்தில்..
உலகம் ஒரு பொய்த் தோற்றம்..
அவா்களுக்கு எதிலும் பற்றோ..
விருப்பமோ.. வெறுப்போ.. ஏதும்
இருக்காது..
எப்பொழுதும் மாறாத சாந்த சொரூபம் உடையவா்களாக இருப்பாா்கள்..
ஞானிகள்...
Comments