இன்று நாம் காணவிருப்பது சூரியன் ஜென்ம லக்கனத்தில் இருந்தால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் அதற்குரிய பரிகாரங்கள் பற்றியதாகும்.
நவக்கிரக வரிசையிலே நடுநாயகமாக விளங்குபவர்தான் சூரியன். இவரின்றி இவ்வுலகம் இல்லை. நம் ஆத்மாவிற்கு மூலக் காரணமாகவும், தந்தை மற்றும் தந்தை வழி உறவு, தலை, தைரியம், அறிவு ஆகியவற்றை சூரியன் மூலம் அறியலாம்.
இப்படிப்பட்ட சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் ஜனன காலத்தில் நல்ல படியாக அமைந்துவிட்டால் ஏற்படும் நன்மை, தீமை, தொந்தரவுகள் வரும் என்பதை பரிகாரத்தின் மூலம் காணலாம்.
சூரியன் ஜென்ம லக்கனத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு ஆயாசம் ஏற்படும். சுறுசுறுப்பும் குன்றும். குடும்ப செல்வாக்கு இவரின் பிறப்பால் குறைந்து விடும். சாதாரண செயலுக்குக்கூட அலைச்சல் உண்டாகும். வார்த்தைகளில் சாந்தம் குறைந்து கடுகடுப்பு மேலோங்கும், ஆரோக்கியம் குன்றும்.
இக்குறை உள்ளவர்கள் இந்நிலையை அவர்களின் ஜாதத்தில் சூரியன் ஜென்ம லக்கனத்தில் இருப்பது ஒரு காரணமாக அமைகிறது.
இக்குறைப் போக்குவதற்கான பரிகாரமாக பின்பற்றப்படும் வழியானது, காலையில் எழுந்ததும், சூரிய பகவானை 3 முறை சாஷ்டாங்கமாக வணங்கி, "ஓம் நமோ பகவதே சூரிய நாராயணாய நமஹ" என 12 முறை ஜெபித்தால் மேற்கூறிய குறைகள் நீங்கி விடும்.
இவ்வாறு சூரியன் ஜென்ம லக்கனத்தில் இருக்கும்பொழுது, நிறைகள் குறைந்து, குறைகள் நிறைந்து காணப்படும். அதை நிவர்த்தி செய்ய, தம் முன்னோர்கள் உரைத்த மேற்கூறிய பரிகாரத்தை முறையாக கடைபிடித்து பலன் பெற வேண்டுமெனக் கூறி இப்பகுதியை நிறைவு செய்கிறோம்
Comments