பொய்” சொன்னால் யாருக்கும் பிடிக்காது...!
ஆனால் பொய் சொல்லாமல்
யாருமே இந்த உலகத்தில் வாழ முடியாது...!
“பொய்” பற்றிய இந்த உண்மையை , உன்னதமாகச் சொல்லும் இந்த “உயர்ந்த மனிதன்” பட வசனத்தை , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..!
“உயர்ந்த மனிதன்” படத்தில் சிவாஜி , சௌகார் ஜானகியிடம் பேசும் , உணர்ச்சிகரமான வசனம் இது :
“ எனக்குப் பிடிக்காத கேள்விகளையெல்லாம் கேட்டீன்னா என்கிட்டே இருந்து உண்மை வராது..!
பொய்தான் வரும்...!
நீ கஷ்டப்பட்டு என்னைப் பத்தி கண்டு பிடித்தது ரெண்டு பொய் ! ஆனா நம்ம வாழ்க்கையிலே எவ்வளவு பயங்கரமான பொய்கள் மறைஞ்சிருக்குன்னு உனக்குத் தெரியுமா ?
உன் கணவன் யார் ?.... மிஸ்டர் ராஜலிங்கம் – OWNER OF SEVEN MILLS… AND , FIFTY THOUSANDS ACRES OF FERTILE LAND ! !
இதெல்லாம் என்ன..? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ?..நாம ஓயாம , ஒழியாம பொய் சொல்லிக்கிட்டிருக்கோம்னு அர்த்தம் !
நாம எழுதற கணக்கிலே பொய் ! ரிஜிஸ்டர் ஆபீஸிலே பொய் ! நம்ம தொழிலாளிங்ககிட்ட பொய் ! நம்ம கூட்டாளிகிட்டேயே பொய் !
இப்படி பொய் ! பொய் ! பொய் !
இப்படி பொய்யே பேசிக்கிட்டு இருக்கிறதலாலதான் ஒரு " மில் " இன்னைக்கு ஏழு மில் ஆச்சு !
ஏன் ..? இதோ...உன் கழுத்திலே மின்னுதே வைர நெக்லஸ் ! அதனுடைய விலை என்ன..?
கடைக்கணக்கு பிரகாரம் 3 லட்சம் ! ஆனால் அதனுடைய உண்மையான விலை.... பல லட்சக்கணக்கான பொய்கள் !
நாம ஏறிப் போற கார் , இந்த பங்களா, இந்த வீடு, வாசல் , சொத்து , சுகம் , ஆஸ்தி , அந்தஸ்து – இதெல்லாம் என்ன ...?
எங்க தாத்தா சொன்ன பொய் !
எங்க அப்பா சொன்ன பொய் !
இப்போ நான் சொல்லிக்கிட்டிருக்கற பொய் !”
# “உயர்ந்த மனிதன்” படத்தின் “பொய்” பற்றிய இந்த வசனம் , முற்றிலும் உண்மையே ...!
1967 க்குப் பிறகு ..
பொய்தான் நம்மை ஆண்டது...!
பொய்தான் இப்போது ஆளுகிறது..!
இனி வரும் வருடங்களிலும் ,
பொய்தான் நம்மை ஆளப் போகிறது..!
# எனினும் ... முடிந்தவரை பொய்களைத் தவிர்த்து விடுவதே நல்லது...!
ஏனெனில் ..
“நாம் சொன்ன ஒரு பொய்
இந்த உலகத்திற்குத் தெரிய வரும்போது ,
நாம் சொன்ன அத்தனை உண்மைகளும்
சந்தேகத்திற்கு இடமாகின்றன..”
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments