தயவு செய்து யாரும்
படிக்காதீர்கள்.
.
படித்தவுடன் கொலை வெறி வந்தால் நான் பொறுப்பு அல்ல.
.
.
.
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
**
**
அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்
**
**
மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது
**
**
பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …
**
**
““மொய் எழுதறவருக்குப் பக்கத்துலேயே ஒருத்தர் நின்னுக்கிட்டிருக்காரே யார் அவரு?” “”அவர்தான் “மொய்க்’ காப்பாளர்!”
**
**
"காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?"
"அவங்க "மெய்" மறந்து காதலிக்கிறவங்களாச்சே!"
**
**
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!
**
**
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..." "உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
**
**
"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க...?
"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"****
**
**
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
**
**
தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது
என்றும் அன்புடன்
(படிச்ச பின்னாடி அன்பு உங்களுக்கு இருக்காதுன்னு தெரியுது)
Comments