கோபத்தை குறைக்க சில வழிகள்:
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
கோபத்தை குறைக்க சில வழிகள்:
சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது.
எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.
7. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.
8. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.
9. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.
10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.
11. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments