காட்சி... 1...
ஒரு திருவிழா...
பெண்மணி
ஒருவர் தன்
குழந்தையுடன்
சென்றார்...
கூட்டத்தில்
குழந்தையை
தவற விட்டவர்...
ஒப்பாரி வைத்து
அழத்
தொடங்கினார்...
ஒரு நல்லவர்
குழந்தையை
கண்டு பிடித்து
கொடுத்தார்...
மகிழ்ச்சி
அடைந்த
அவள்...
மீண்டும்
ஒப்பாரி
வைத்து
அழ
தொடங்கினாள்...
அந்த
குழந்தையின்
செருப்பு
தொலைந்ததே
காரணம்...
காட்சி... 2...
ஒரு
விவசாயி
அவன்
தோட்டத்தில்...
அதிக
கத்தரி
விளைந்தும்...
வருத்தத்துடன்
அமர்ந்திருந்தான்..
அவன்
நண்பன்
வருத்தத்திற்கான
காரணம்
கேட்டான்...
கத்தரி
விளைச்சலில்
எல்லாமே
தரமாக
உள்ளது...
சொத்தை
காய்கள்
இல்லை...
இந்த
நிலையில்...
என்
பன்றிகளுக்கு
உணவாக
போட...
சொத்தை
காய்களுக்கு
எங்கே
போவேன்...
என்று
புலம்பினான்...
காட்சி...3...
ஞானியிடம்
ஒரு
கிராமவாசி
என் மனைவி
வீடு முழுவதும்
கோழி வளர்க்கிறாள்...
நாற்றம் தாங்க
முடிய வில்லை
என்ன செய்வது
என்று கேட்டான்...
ஜன்னல்களை
திறந்து வை
நாற்றம் போகட்டும்...
என்று
ஞானி கூறினார்...
அதற்கு கிராமவாசி...
ஜன்னலை
திறந்தால் என்
புறாக்கள்
எல்லாம் பறந்து
போய்விடுமே...
என்று
வருத்தத்துடன்
கூறினான்...
காட்சிகளின்
தொகுப்பு...
நம் மனிதர்களில்
பலர் இவ்வாறு
தான் ...
எதற்கு
கவலை பட
வேண்டும்...
எதற்கு
மகிழ்ச்சி
அடைய
வேண்டும்...
என்னும் மன
நிலையில்
மாறுபடுகின்றனர்...
எல்லாம்
அவன்
செயல் ...
என்னும்
பெரியோர்களின்
வாக்குபடியும்...
குறை ஒன்றும்
இல்லை
மறை
மூர்த்தி
கண்ணா...
என்னும்
கருத்து
படியும்...
நம்
எண்ணங்களில்
செயல்களில்
எதிர் பார்ப்புகளில்...
நேர்மையுடனும்
உண்மையுடனும்
நியாயமாகவும்
இருந்தால்...
எதற்கும்
வருத்த பட
வேண்டிய
அவசியம்
இல்லை...
எல்லாமே
நல்லபடியாகவே
அமையும்...
Comments