Skip to main content

காலை செய்தி 12-4-2016

♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴12-4-2016🌴🌴🙏
📡➖📡➖📡➖📡➖📡
♈🇮🇳🌴இரட்டை நாக்கு அரசியல்வாதிகள். இல்லை.....இரட்டைத்தலை பாம்பு ஒன்றை அமெரிக்கரான ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்தால்தான் அதால் திறம்பட செயலாற்ற முடியும்
அசாதாரணமான இந்தப் பாம்பை, அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகள் இருந்தாலும் இந்தப் பாம்புக்கு ஒரே உடல் மட்டுமே.
இப்படியான பாம்பு ஒன்று காட்டில் இருப்பதை கேள்விப்பட்ட டால்போட் தனது நண்பர்களுடன் சென்று இந்தப் படங்களை எடுத்துள்ளார்.

தான் ஊர்வன மற்றும் பாம்புகளின் மிகப்பெரும் ரசிகன் எனக் கூறும் அவர், பல சந்தர்ப்பங்களில் பாம்புக் கடிக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை விஷமற்ற பாம்புகளாக இருந்துள்ளன.
எனினும் இந்த இரட்டைத் தலைப் பாம்பின் ஒரு தலை மற்றொன்றைவிட ஆக்ரோஷமாக இருந்தது எனும் அவர், இரண்டு தலைகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கடிக்க முடிகிறது என்கிறார். அதன் உடல் அசைய வேண்டுமானால் இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்கிறார் டால்போட்.
பொதுவாக இரட்டைத் தலை பாம்புகள் சில மாதங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. எனவே இப்படியான பாம்புகள் உலகளவில் எவ்வளவு உள்ளன என்பதை கணிப்பது மிகவும் கடினமான ஒன்று என அவர் கூறுகிறார்.

பாம்புகள் குறித்த மனிதர்களின் புரிதலும் கற்பனைகளும் அலாதியாவை. நஞ்சைக் கக்கும் பாம்புகள் கடித்தால் மட்டுமே உடலில் விஷம் ஏறும்.

♈🇮🇳🌴வங்கதேசத்தில் துறைமுகத்தை நிறுவுகிறது இந்தியா; நிதின் கட்கரி தகவல்

♈🇮🇳🌴தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி பத்திரிகையாளர்களை சந்தித்தாக புகார்: தருண் கோகாய் மீது எப்.ஐ.ஆர் பதிவு

♈🇮🇳🌴ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் மோடி சட்டம் கொண்டு வருவார்: விஷ்வ இந்து பரிஷத் நம்பிக்கை

♈🇮🇳🌴எங்களுக்கு கொள்கை இல்லை; அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும்
என்பதே எங்களின் கொள்கை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

♈🇮🇳🌴யேமனில் அமலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

♈🇮🇳🌴உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

♈🇮🇳🌴அரசியல் சாசனத்தை விட பாரம்பரியம் பெரிதா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோயிலுக்குள் அனுமதிப்பதில் இனபாகுபாடு பார்ப்பது ஆபத்தானது என கூறியுள்ளது.

சபரிமலை கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை ஒழிக்கப்பட்டது போல், இந்த நடைமுறையையும் மாற்றப்பட வேண்டும் என மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு குறித்து பதிலளிக்க சபரிமலை நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, கடவுளை யார் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம். நீங்கள் கடவுளை சிலையாக வடித்துள்ளீர்கள். நீங்கள் பெண்ணாக இருப்பதால், கோயிலுக்குள் வரக்கூடாது என உங்களால் கூற முடியுமா? இந்த விவகாரத்தில் இனபாகுபாடு பார்ப்பது ஆபத்தானது. அரசியல் சாசனத்தை விட பாரம்பரியம் பெரியதா

அரசியல் சாசனத்தை மிஞ்சி, பாரம்பரிய நடைமுறைகள் செயல்படுத்த முடியுமா அரசியல் சாசன ரீதியாக கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என சட்டம் நிறைவேற்ற முடியுமா பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு யாராலும் தடை விதிக்க முடியுமா எனக்கூறினார்.

♈🇮🇳🌴 விருத்தாசலத்தில் ஜெயலலிதா பேசிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 15 பேர் மயக்கம் 

♈🇮🇳🌴 திமுக கூட்டணிக்கு மதேமுதிக அளித்த ஆதரவை ஏற்பதாக கருணாநிதி தகவல்: சந்திரகுமார் பேட்டி 

♈🇮🇳🌴விருத்தாசலத்தில் ஜெயலலிதா பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி 

♈🇮🇳🌴தேர்தல் விதிமுறையை மீறியதாக அசாம் முதல்வர் தருண்கோகோய் வழக்குப்

♈🇮🇳🌴 | ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக அறிக்கை

 ♈🇮🇳🌴ஐ.பி.எல்., கிரிக்கெட்: குஜராத் அணி்க்கு 162 ரன் இலக்கு  

♈🇮🇳🌴ஆப்கானில் தற்கொலைபடை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி  

♈🇮🇳🌴 முதல்வர் ஜெயலலிதா பிரசார சுற்றுப்பயணம் மாற்றம்  

♈🇮🇳🌴பா.ஜ. கூட்டணியில்
ஐ.ஜே.கே. கட்சிக்கு 45 தொகுதிகள்  

♈🇮🇳🌴இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் உள்ளன: ரகுராம் ராஜன்

♈🇮🇳🌴கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அ.தி.மு.க., பொது செயலர் ஜெ., இன்று 2 வது நாள் பிரசாரம் துவக்கினார். நான் சொன்தையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என இந்த கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

♈🇮🇳🌴'2ஜி' பணத்தில் பலன் அடைந்தவர் ஸ்டாலின்: வைகோ ஆவேசம்

♈🇮🇳🌴ஐபிஎல் 2016க்கான வர்னணையாளர் காண்டிராக்டிலிருந்து பிரபல கிரிக்கெட் வர்னணையாளர் ஹர்ஷா போக்ளேவை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ஒரு டிவிட்டை வைத்து போக்ளேவை தூக்கியுள்ளது பிசிசிஐ.

♈🇮🇳🌴பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிப்பு!

♈🇮🇳🌴ஸ்டாலினுக்கு எதிரி அவரே தான்!'விஜயகாந்த் விளாசல்

♈🇮🇳🌴பாகிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

♈🇮🇳🌴ரஷியாவில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

♈🇮🇳🌴கேரளா, ஆந்திரா, அரியானாவில் 4G இண்டர்நெட் சேவையை வழங்குகிறது 'நோக்கியா'

♈🇮🇳🌴விஜயகாந்த் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கம் 

♈🇮🇳🌴தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர், நடிகர் , இயக்குனர் ,கதை, திரைகதை வசனகர்தா, திரைப்பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்,  முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர்  , காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் திரு.கே.ராஜன் பிறந்தநாள் இன்று...

♈🇮🇳🌴திமுக தேர்தல் அறிக்கைக்கு காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வரவேற்பு 

♈🇮🇳🌴சென்னையில் காதலி கழுத்தை நெரித்துக் கொலை: காதலன் கைது 

♈🇮🇳🌴அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் சந்திரசேகர் உள்ளிட்ட மதேமுதிக-வினர் சந்திப்பு

♈🇮🇳🌴ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 பேர் பலி; 38 பேர் படுகாயம் 

♈🇮🇳🌴கோயிலில் பட்டாசுவெடித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீஸ் 

♈🇮🇳🌴 அசாமில் 2-ம் கட்டத் தேர்தல் : 80 சதவீதம் வாக்குப்பதிவு 

♈🇮🇳🌴 ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு: கருணாநிதி அறிக்கை 

♈🇮🇳🌴 ஜி.கே.வாசன் அமைத்த கூட்டணி கட்சிக்கு உகந்தது அல்ல என்பதால் விலகினேன்: அல்போன்ஸ் பேட்டி 

♈🇮🇳🌴அசாமில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலி 

♈🇮🇳🌴 கோயில்களில் பட்டாசு வெடிக்கத் தடை கோரி வழக்கு :நீதிபதி உயர்நீதிமன்றத்தில் மனு 

♈🇮🇳🌴 சோமாலியாவில் உணவு விடுதியில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி 

♈🇮🇳🌴விஸ்வரூபம் கோரிக்கை....

ஆரணிசெய்தியாளர் தாக்கமுயற்சி
--------------------
திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  மாங்கா மரம் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ் பழுதுபார்க்கும் மையத்தில்  பஸ் தீப்பற்றி புகைமண்டலமாக மாறியதையும் கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு துறையினரையும்  போக்குவரத்து பாதிப்புகளையும் செய்தி சேகரிக்க சென்றபோது   பஸ் உரிமையாளர்கள்  மது மற்றும் இளங்கோ  செய்தியாளார்களை செய்தி சேகரிக்கவிடாமல்  தரக்குறைவாக பேசி கோபமாக தாக்க முயற்சித்து தள்ளிவிட்டதால் பெரும் பரபரப்பு 

செய்தியாளர்களை தாக்க. முயற்ச்சித்த பஸ் உரிமையாளர் மது  மற்றும் இளங்கோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கிட விஸ்வரூபம் கோரிக்கை.

♈🇮🇳🌴கிரானைட் ஊழல்: சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: விஜயகாந்த்  

♈🇮🇳🌴பா.ஜ. கூட்டணியில் இருந்து புதிய நீதிக்கட்சி விலகல்    

♈🇮🇳🌴பா.ஜ. கூட்டணியில் மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் தொகுதி பங்கீடு  

♈🇮🇳🌴கோவில் தீ விபத்து: கேரள அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

♈🇮🇳🌴 மோடியும், பா.ஜ.,வும் கடவுள் கொடுத்த வரம்: அமைச்சர் ராதாமோகன்  

♈🇮🇳🌴புதுக்கோட்டையில் இரு வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலி

♈🇮🇳🌴நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலைய எழுத்தர் அவரின் காதல் ஒவியம். நீங்க ஸ்டேசன் பக்கவே வரவேண்டாம். எல்லாம் முடிச்சிட்டேன். எனக்கு நீங்க வேணும். ம் கிடைக்குமா ?  இந்த ஆடியோ..இப்ப பரபரப்பா வாட்ஸ அப்ல சுத்திகிட்டு இருக்கு ...வழக்கை பிரச்சனை இல்லாமல் முடிக்க படுக்கைக்கு அழைக்கும் காவல்துறை....

Comments

Popular posts from this blog

TNPSC Combined Technical Services Examination 2025 - Non Interview Posts

Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10***   Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025

Technical Publication Ebooks Free Download

CSE - Technical Publication eBooks (R17) 🧩 ~~~ The below mentioned books are only available to us through Mr. Sai Seena ( @SaiSeena ), if you have any other E-BOOKS for any department kindly share it to us. Thank You ~~~ 🧩  *CSE - SEMESTER I*   *GE8151 - Problem Solving and Python Programming*  https://tinyurl.com/GE8151-TP  *CSE - SEMESTER II*   *HS8251 - Technical English*  https://tinyurl.com/HS8251-TP  *BE8255 - Basic Electrical, Electronics and Measurement Engineering*  https://tinyurl.com/BE8255-TP  *GE8291 - Environmental Science and Engineering*  https://tinyurl.com/GE8291-TP  *CS8251 - Programming in C*  https://tinyurl.com/CS8251-TP  *CSE - SEMESTER III*   *CS8391 - Data Structures*  https://tinyurl.com/CS8391-TP  *CS8392 - Object Oriented Programming*  https://tinyurl.com/CS8392-TP  *EC8395 - Communication Engineering*  https://tinyurl.com/EC8395-TP  *CSE - SEM...

Transmission and Distribution

  OBJECTIVES:   To make students to develop expression for computation of line parameters and develop equivalent circuits, analyze the voltage distribution in insulator strings, mechanical design of lines, substation, grounding system and  familiar with recent trends in electrical power system for the transmission and distribution. Technically and economically.  UNIT I - TRANSMISSION LINE PARAMETERS   Structure of Power System – Parameters of single and three phase transmission lines with single and double circuits – Resistance, inductance and capacitance of solid, stranded and bundled conductors – Symmetrical and unsymmetrical spacing and transposition – Application of self and mutual GMD – Skin and proximity effects – Typical configurations – Conductor types and electrical parameters of EHV lines.   UNIT II - MODELLING AND PERFORMANCE OF TRANSMISSION LINES   Performance of Transmission lines – Short line, medium line and long line – Equivalent circ...