பிரித்து உபயோகித்த உடனே இறுக்கமாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ்’ என்ற பாக்டீரியாதான் உணவை கெட வைத்து விஷமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஸ்டெரப்டோகாக்கஸ், ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆகிய பாக்டீரியாக்களும் தன் பங்குக்கு உணவுகளை கெட்டுப்போகச் செய்கின்றன.
இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் திறந்த உணவுகளின் மீதுதான் காற்றின் மூலம் வளருகின்றன.
40 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் உள்ள பொருட்களில்தான் இந்த பாக்டீரியாக்களால் வளர முடியும்.
குளிர்சாதனப் பெட்டியில் உள்ள குறைவான வெப்பநிலையால், அங்கு இந்த பாக்டீரியாக்களால் பரவ முடியாது. உணவும் கெட்டுபோகாமல் சில நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கான மட்டன், மீன், இறால் போன்றவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இது எப்படி சாத்தியம்?
அங்கே அந்த மாமிசங்களை வெட்டி சுத்தப்படுத்தி 0 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரீசரில் பாதுகாத்து அனுப்புவார்கள்.
இங்கே வந்ததும் அதை ஹோட்டலில் உள்ள ஃப்ரோஸன் பகுதியில்
(Frozen zone) வைத்துவிடுவார்கள்.
மாமிசத்தை தண்ணீரில் சுத்தப்படுத்தி சமைப்பார்கள்.
இப்படி பாதுகாக்கப்படும் உணவுகள் 2 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும்.
கிருமிகளால் இந்த வெப்பநிலையில் வளர முடியாததே இதற்குக் காரணம்.
ஆனால், கடைகளில் ஃப்ரோஸன் உணவுப்பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அடிக்கடி மின்சாரம் போகும் கடைகளில் இவ்வகை உணவுப்பொருட்களை வாங்கக்கூடாது.
திங்கட்கிழமை முழுவதும் கடையில் மின்சாரம் இல்லை.
அந்தக் கடையில் ஜெனரேட்டரும் இல்லை என்று வைத்துக்கொள்வோம்.
செவ்வாய்க் கிழமை அந்தக் கடைக்கு சென்று ஃப்ரோஸன் பேக்கில் உள்ள ஏற்கனவே சமைத்த சிக்கனை வாங்கினால், கண்டிப்பாக அதில் பாக்டீரியாக்கள் பரவியிருக்க வாய்ப்புண்டு.
அதை வாங்கி வந்து நமது வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்து சாப்பிட்டால் புட் பாய்ஸன் ஆக வாய்ப்புகள் அதிகம்.
ஒரு உணவு கெட்டிருக்கிறது என்பதை அதன் தோற்றம், அதில் இருந்து வரும் நாற்றத்தை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும்.
சுவைத்துப் பார்க்கக்கூடாது. அது விஷத்தை வலிய சாப்பிடுவதற்கு சமம்.
இரண்டு நாள் ஃப்ரிட்ஜில் வைத்த சட்னியில் லேசான நாற்றம் இருந்தாலும், ‘சாப்பிட்டுப் பார்ப்போமே’ என தோசையை சட்னியில் தொட்டு வாயில் வைத்து சுவைத்துப் பார்ப்பார்கள்.
இப்படிச் செய்வது விபரீத விளையாட்டாகும்.
கெட்டுப் போயிருக்கிறது என சந்தேகம் வந்தாலே உணவை குப்பையில் போட்டுவிடுங்கள்.
இல்லையெனில் உங்கள் வயிறு குப்பைத் தொட்டியாகிவிடும்.
வாரக்கணக்கில் காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கக்கூடாது.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், மனைவி ஒருநாள் சமைத்தால் கணவன் ஒருநாள் சமைக்கலாம்.
சமைக்கத் தெரியாவிட்டால் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தாவது உதவலாம்.
இதுபோல பகிர்ந்துகொண்டால் சமையல் பொருட்களை ஃப்ரிட்ஜில் பாதுகாத்து வைக்கத் தேவையிருக்காது.
ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.
பழங்களை அதிகபட்சம் 4 முதல் 5 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
முட்டையை ஃப்ரிட்ஜில் வைத்த 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும்.
மாமிச உணவுகளை ஃப்ரீசரில் வைக்கும் போது நன்றாகக் கழுவி, அலுமினியம் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
சிலர் மீனை வெட்டி மசாலா, மஞ்சள்பொடி தடவி அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள்.
அடுத்த நாள் எடுத்து பொரிப்பார்கள்.
இது உண்மையில் சிறந்த முறை.
மஞ்சள் பொடியும் மசாலாவும் பிரிசர்வேட்டிவ் ஆகச் செயல்பட்டு மீனை அதே சுவையுடன் ஃப்ரெஷ்ஷாக வைக்கும்.
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
ஃப்ரிட்ஜை சரியாக மூட வேண்டும்.
இல்லாவிட்டால், பூச்சிகள் புகுந்துவிடும்.
இதனாலும் உணவு நஞ்சாகலாம்.
ஏதாவது ஒரு உணவுப்பொருள் மற்ற உணவுடன் கலந்தாலோ அல்லது அதன் மேல் சிந்தினாலோ அதை பயன்படுத்தாமல் வெளியே எடுத்துவிட வேண்டும்.
ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும்.
டப்பாக்களை வெளியே எடுத்து சுத்தமாக கழுவி உலர்த்தி உள்ளே வைக்க வேண்டும்.
சிலர் ஃப்ரிட்ஜில் இருந்து முடைநாற்றம் வரும் வரை கழுவ மாட்டார்கள்.
நாற்றம் வந்தால் அந்தப் பொருட்களை உடனடியாக ஃப்ரிட்ஜில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும்.
மின்சாரம் போய்விட்ட நாளன்று, ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட வேண்டும்.
Immunocompromised persons என்னும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.
குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள், ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள் பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.
ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்...’’
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments