இப்படியும் சில மனிதர்கள்!
எதையும் பிராக்டிகலா திங்க் பண்றவர். எப்பவும் அடுத்தவங்களும் நல்லா இருக்கணும்.
நாமளும் சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு ஆசைப்படறவர்
அவருக்கு ஒரு சமயம் தீடீர்ன்னு உடம்பு சுகமில்லாமே போயிட்டது.
டாக்டர் கிட்டே போனார்.பணம் குடுத்தார் வைத்தியம் பார்த்துக்கிட்டார்!
அவரு எழுதிக் கொடுத்த் மருந்து சீட்டை வாங்கினார். ஒரு மருந்துக் கடைக்குப் போனார்
பணம் கொடுத்தார் மருந்து வாங்கினார் வீட்டுக்கு வந்தார்
அதுக்கு அப்புறம் அந்த மருந்தை சாப்பிடணும்லே சாப்பிடலே! அப்படியே வச்சட்டார்!
அவரைப் பார்த்து கேட்டேன்.
''ஏன் சார் இப்படி பண்றீங்க வீண் செலவுதானே இது நீங்க ஏன் டாக்டர்கிட்டே போய்
பணம் செலவு பண்ணிணீங்க?-ன்னேன்.
டாக்டர் வாழணுமில்லையா? அதுக்காக!- ன்னார்
சரி அப்புறம் ஏன் மருந்து வாங்கினீங்க? -ன்னேன்.
மருந்துக் கடைக்கார்ர் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார்
சரி அப்புறம் ஏன் வாங்கின மருந்தை சாப்பிடாமே வச்சுட்டீங்க?-ன்னேன்.
நான் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார் அந்த ஆள்!....
- தென்கச்சி.கோ.சுவாமிநாதன் ...
Comments