தினம் ஒரு திருக்குறள்
குறள். 16.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
விளக்கம் :
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
அல்லது :
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
Comments