2016 சட்டமன்ற தேர்தல் நேர்மறை முடிவுகள்.
பணநாயகம் என வாய் கிழிய கூவினாலும் மக்கள் மிகச்சிறந்த தீர்ப்பையே வழங்கியிருக்கிறார்கள்.
தீர்ப்பு 1:
இரண்டாம் முறையாக வாய்ப்பளித்தன் மூலம் சென்ற ஆட்சி விட்டுச்சென்ற நிதிச்சுமையை காரணம் காட்டி எந்த கட்டணங்களையும் உயர்த்த இயலாது.
தீர்ப்பு 2
சாத்தியமாக்க இயலாத தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்தையும் சாத்தியப்படுத்தியே ஆகவேண்டும்
தீர்ப்பு 2016 - 3
மின்மிகை மாநிலமாக்கப்பட்ட தமிழ்நாடு என கூறப்பட்டு விட்டதால் மின்வெட்டு செய்ய இயலாது.
தீர்ப்பு 4
சென்ற ஆட்சியின் பாதகத்தால்தான் இப்படி என இனி சட்டமன்றத்தில் எதனையும் சொல்ல இயலாது.
தீர்ப்பு 5
கடந்த 30 ஆண்டுகளாக மாற்றி மாற்றி வாய்ப்பளித்ததால் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லுதல் பழி வாங்குதல் என காலத்தை கடத்தினர். இந்த முறை மக்கள் அந்த தவறை செய்யவில்லை.
இவைகளை விட சாதி மத இன கட்சிகளை தோற்கடித்ததன் மூலம் பிரிவினைகளை வளர்க்கும் சக்திகளை வெறுத்து மக்களின் ஒற்றுமை வென்றுள்ளது.
இவைகள் அனைத்தையும் விட மிகப் பலமான எதிர்க் கட்சி;
அத்தனையும் பார்க்கும் போது முதலமைச்சர் பதவி முள் கிரீடமே.
தேர்தல் முடிவுகள் ஜனநாயகம் காப்பாற்றப் பட்டது. நேர்மறை எண்ணங்களுடன் புதிய ஆட்சியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்....
Comments